திசை மாறி பயணிக்கும் வாழ்வில்
வண்ணத்து பூச்சிகளும்
வெண்மேகங்களும்
மழைச் சாரல்களும்
வருடி செல்லும் தென்றல் காற்றும்
வெண்ணிலாவும்
சூர்யோதயங்களும்
குயிலோசைகளும்
கவித்துவமான பொழுதுகளும்
கடந்து தான் செல்கின்றன. .
என்றும் உடன் வருகிறது
சப்தமற்று
எல்லைகளற்று நீளும் வானம் !!