வண்ணங்கள் யாவும் நிரம்பிய நாட்களில்
சிறக்குகள் விரித்து கனவுகளின்றி
கவிதைகள் பாடியத்தொரு காலம். .
வெண்புரவியில் ஏறி ஒருவன் மெதுவாய் இதயம் திருடி
முழுதும் அள்ளிச் செல்வான் என
இமைகள் திறந்தே கனவுகள் கண்டு
கவிதைகள் தீட்டியதொரு காலம். . .
யாவும் உணர்வுக் குப்பை என்றே
கவிதைகள் வெறுத்துக் கழித்ததொரு காலம். .
எது வந்த போதிலும் கரையாமலும்
காட்டாமலும் இதயம் சேர்க்காமலும்
பொதுவாய் புன்னகைத்து
நொடிகளில் வாழ்வது இக்காலம்!!