Thursday, October 13, 2011

வாழ்க்கை!!


வெறித்துப் பார்க்கிற ஜன்னல் வழி
கசிந்தே கரைகிறது பொழுது. .
தனியாய் சாலை கடக்கயிலே
தெரிந்த குரல் விளிப்பதாய் நினைவு. . .
பள்ளிக்கால தோழி ஒருத்தி தொலைபேசியில் அழைப்பதாய்
மறந்து போன பழங்கதைகள் சில பேசுவதாய்
அடிக்கடி வருகிறது குழம்பிய கனவு. .
முகம் பார்க்காத உரையாடல்களின் வழி
உயிர் பிழைக்கின்றன உறவுகள். .
தீராத தேடலில் தொலைவது யாதாயினும்
தொடர்ந்தே நகர்கிறது வாழ்க்கை
விரும்பினும் விரும்பாவிடினும். . .

No comments:

Post a Comment