உன்னவளாய் இருக்கையிலே
உன் தாயுமாய் உணர்கிறேன். .
தலை கோதும் விரல்களை
நீ அழுத்தி பற்றும் நொடி
விளக்கி விடுகிறது
ஆயிரம் காவியங்கள் விளக்க முடியா காதலை!!
****************************
கீதம் அகன்று வெறும் வரிகளாய் நீளும் பாடல்களும். .
வெறும் வினாடிகளின் நீட்சியாய் நாட்களும். . .
கனவுகளற்ற மஞ்சள் வெயில் மாலையும். . .
அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாய் கவிதைகளும். . .
உள்மனதில் ஒட்டாமல் உதட்டோடு உறவாடும் புன்னகைகளும். .
மழை நனைத்த ஒரு வழிப் பாதையில் எண்களின் நினைவுகளும். . .
உன்னை நீங்கிவிட்ட
என் அடையாளங்கள்!!
*************************************
பிரிந்து போன உன் நினைவுகள்
தினம் கண்களுக்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றன
கனவுகளாய் அல்ல
கண்ணீராக. .
*********************************
உன்னில் நான்
காதலாய் இருக்கிறேன். . .
என்னில் நீ
கவிதையாய் இருக்கிறாய். . .
************************************
பல நேரங்களில் நாம் பேசுவதில்லை. .
காதல் மட்டுமே பேசுகிறது. . .
*************************************
பேசாத வார்த்தைகளைக் கூட
கவிதைகளாக்கி விடுகிறாய். . .
'என்னதான் செய்கிறாய்?' என்றால்
அப்பாவியாய் சொல்கிறாய்
காதலைத் தவிர
நான் ஒன்றும் செய்யவில்லை என. .
***************************************
பல நேரங்களில் நாம் பேசுவதில்லை. .
ReplyDeleteகாதல் மட்டுமே பேசுகிறது. . .
பேசாத வார்த்தைகளைக் கூட
கவிதைகளாக்கி விடுகிறாய். . .
'என்னதான் செய்கிறாய்?' என்றால்
அப்பாவியாய் சொல்கிறாய்
காதலைத் தவிர
நான் ஒன்றும் செய்யவில்லை என. .
nice line
Awesome lines
ReplyDelete"பேசாத வார்த்தைகளைக் கூட
கவிதைகளாக்கி விடுகிறாய். . .
'என்னதான் செய்கிறாய்?' என்றால்
அப்பாவியாய் சொல்கிறாய்
காதலைத் தவிர
நான் ஒன்றும் செய்யவில்லை என. ."
Your website is too good.
ReplyDeleteபிரிந்து போன உன் நினைவுகள்
தினம் கண்களுக்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றன
கனவுகளாய் அல்ல
கண்ணீராக. .
Specially these lines are fantastic.
Visit my blog http://sandhananila.blogspot.in/