காதோரம் காதல் சொல்
என்கிறாய் நீ . . .
கனவுகள் கோர்த்து
கவிதைகள் சேர்த்து
இதயம் பேசிடும் மொழியில்
நாம் செய்த காதல்
வார்த்தைகளால் காயம் படக் கூடுமே. .
நானே காதலாகி உன் இதயம் சேர்ந்த பின்னே
வார்த்தைகள் தொலைந்து போயின என்கிறேன் நான். .
புன்னகை செய்து
கலந்து போகிறாய் கண்ணோடு. . . . . . . . .
No comments:
Post a Comment