துவள்கிற சமயங்களில் என் தலை கோதும் விரல்களை
அழுத்தி பிடித்துக் கொள்கிறேன் கனவிலே. .
என்ற பழைய கவிதையின் கடைசி வரியை
புதிதாய் ஒரு முறை குறிபேட்டில் எழுதி
இருமுறை அழுத்தமாய் அடிகோடிட்டு சாய்கையில்
உண்மையாகவே
பக்கமாய் நீ வருகிறாய். .
கன்னம் வருடி
கலைத்து போகிறாய்
கவலைகளையும் கலக்கங்களையும்..
இறுதியாய் ஒரு முறை
உன்னோடு வீழ்கிறேன் காதலில். . .
நிலா!
No comments:
Post a Comment