வருடிக் கொடுத்து நிதம் தூங்க வைக்கிறாய்
கதைகள் பேசுகிறாய்
சின்ன சின்னதாய் சண்டைகள் போடுகிறாய்
கை பற்றி காதல் உரைக்கிறாய்
இல்லாத நேரங்கள் சுமையாவதாய்
அழகிய பொய்கள் சொல்கிறாய் . .
மழை நாட்களை அழகாக்குகிறாய். .
சில நேரங்களில் குடை தாண்டி பெய்கிற மழையில்
உன்னோடு நானும் என்னோடும் நீயும் என. .
கனவுகள் வந்து அடைத்துக் கொள்கின்றன
உன்னைத் தவிர்த்து எழுத நினைத்த கவிதையின் பக்கத்தை!
No comments:
Post a Comment